தக் லைப் படத்தில் இணைந்த ஹிந்தி நடிகர்!

28 ஆனி 2024 வெள்ளி 14:47 | பார்வைகள் : 4676
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைப்'. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிலம்பரசன், அசோக் செல்வன், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, ஜஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு டில்லி, ஜெய்சால்மர், சென்னை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்போது இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் ரோஹித் சர்ப் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் தமிழில் ‛கமலி பர்ம் நடு காவேரி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.