தனுஷ் 51வது படத்தில் இணைகிறாரா நாகார்ஜுனா?
29 ஆவணி 2023 செவ்வாய் 14:23 | பார்வைகள் : 9100
தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பது மட்டுமின்றி தனுஷ் இயக்கியும் வருகிறார் என்பது தெரிந்ததே. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் விரைவில் வெளியாகும்.
இந்த நிலையில் தனுஷின் அடுத்த படமான 'D51’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க இருக்கிறார் என்றும், இந்த படத்தை விஜய்யின் 'வாரிசு’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது .
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’இஞ்சி இடுப்பழகி’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாகார்ஜுனா நடித்திருந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் தமிழில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan