'சலார்' பிரபாஸைக் காப்பாற்றுமா ?
29 ஆவணி 2023 செவ்வாய் 13:34 | பார்வைகள் : 7027
பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றார் பிரபாஸ். தெலுங்கு நடிகர்கள், ஏன், தென்னிந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத மிகப் பெரிய அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம், ஆதிபுருஷ்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
பிரபாஸின் ஒரே நம்பிக்கையாக 'சலார்' படம் மட்டுமே இருக்கிறது. 'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் இப்படம் செப்டம்பர் மாதம் இன்னும் ஒரு மாத காலத்தில் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிந்து சில வெளிநாடுகளில் முன்பதிவு கூட ஆரம்பமாகிவிட்டது.
ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க பிருத்விராஜ், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். செப்டம்பர் 3ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கு முன்பு வெளிவந்த படங்களின் சாதனைகளை இப்படத்தின் டிரைலர் நிச்சயம் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
'பாகுபலி 2'க்குப் பிறகு வந்த படங்கள் பிரபாஸை ஏமாற்றிய நிலையில் 'சலார்' படமாவது காப்பாற்றுமா என அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.


























Bons Plans
Annuaire
Scan