Paristamil Navigation Paristamil advert login

திடீரென வெடித்துச் சிதறிய செயற்கைக்கோள் -  விண்வெளி வீரர்கள் நிலை....?

திடீரென வெடித்துச் சிதறிய செயற்கைக்கோள் -  விண்வெளி வீரர்கள் நிலை....?

28 ஆனி 2024 வெள்ளி 07:57 | பார்வைகள் : 3601


இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் நிலையில், ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

ரஷ்யாவுக்கு சொந்தமான Resurs-P1 Russian Earth observation satellite என்னும் அந்த செயற்கைக்கோள், செயல்படவில்லை என 2022ஆம் ஆண்டே ரஷ்யா அறிவித்திருந்தது.

இந்நிலையில், புதனன்று மாலை திடீரென அந்த செயற்கைக்கோள் சுமார் 200 துண்டுகளாக வெடித்துச் சிதறியுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் நேரத்தில் அந்த செயற்கைக்கோள் வெடித்துச் சிதற, அவர்களை அனைவரும் ஒரு மணி நேரத்துக்கு தத்தம் விண்கலங்களுக்குள் பாதுகாப்பாக பதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி கட்டுப்பாட்டு அமைப்பு, ரஷ்ய செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியதால் மற்ற செயற்கைக்கோள்களுக்கு இப்போதைக்கு எந்த அபாயமும் இல்லை என்று கூறியுள்ளது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்