துவாறி விலங்கியல் பூங்கா மீது வழக்குப் பதிவு!

27 ஆனி 2024 வியாழன் 11:32 | பார்வைகள் : 11106
ஓநாயின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த பெண் ஒருவர், துவாறி (zoo de Thoiry) உயிரியல் பூங்கா மீது வழக்கு தொடுத்துள்ளார்.
கடந்த ஜூன் 23 ஆம் திகதி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மீது ஓநாய்கள் பாய்ந்து கடித்து குதறியிருந்தன. உயிராபத்தான நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
37 வயதுடைய குறித்த பெண், இன்று ஜூன் 27 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த பூங்கா மீது வழக்கு தொடுத்துள்ளார். ஓநாய்கள் குறித்து எவ்வித விழிப்புணர்வும் அங்கு ஏற்படுத்தப்படவில்லை எனவும், அது தொடர்பாக எந்த வித தகவல்களும்/ அறிவுத்தல்களும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் Yvelines மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண், பாதசாரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் நடைபயிற்சியினை மேற்கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025