யாழில் தாய் பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு

27 ஆனி 2024 வியாழன் 11:02 | பார்வைகள் : 4550
யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கு பகுதியில், பிறந்து. 40 நாட்களான பெண் குழந்தையொன்று பால் புரைக்கேறியதில் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
இணுவில் பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்து படுக்கையில் வைத்துள்ளார் . சிறிது நேரத்தின் பின்னர் குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர் மகளை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் .
அதன்போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் மரணம் தொடர்பில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் பால் புரைக்கேறியமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025