Paristamil Navigation Paristamil advert login

பாலி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாலி தீவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்

29 ஆவணி 2023 செவ்வாய் 10:35 | பார்வைகள் : 11213


இந்தோனேசியாவின் பாலி தீவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் 29.08.2023 அன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

அவை முறையே 5.4 ஆகவும், 5.6 ஆகவும் ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுனாமி ஏற்படும் அபாயமில்லை என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்