நீண்ட நேரம் AC ஓடினால் எவ்வளவு நேரம் Off செய்து வைக்க வேண்டும்...?
25 ஆனி 2024 செவ்வாய் 07:42 | பார்வைகள் : 5726
தற்போது கோடை காலம் நடைபெற்று வரும் நிலையில் நீண்ட நேரம் AC ஓடினால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்போது வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள்.
அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.
நீண்ட நேரம் AC ஓடினால் Compressor சேதமடைந்துவிடும்.
அதாவது, நாம் வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீண்ட நேரம் AC -யை ஆன் செய்து வைக்கிறோம். அப்படி செய்யும் போது Compressor அதிகளவு வெப்பமடையும்.
எனவே நீண்ட நேரம் நாம் AC -யை ஆன் செய்து வைக்க கூடாது.
அதாவது, தொழில்நுட்ப வல்லுநர்களின் பரிந்துரைப்படி, நீண்ட நேரம் ஏசியை பயன்படுத்தினால் ஒவ்வொரு மணிக்கும் குறைந்தது 5 முதல் 7 நிமிடத்திற்கு அதனை அணைத்து வைக்க வேண்டும்.
இந்த காரணத்தினால் ஏசியில் இருக்கும் கம்பரசர் வெப்பமடைவதை தடுக்கலாம். குறிப்பாக ஏசியில் இருக்கும் கம்பரசர் Compressor பழையதாக இருந்தால் விரைவில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.
எனவே, குறிப்பிட்ட காலத்தில் ஏசியில் உள்ள Compressor -யை மாற்ற வேண்டும். மேலும், கம்பரசரை சுற்றி காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏசியை மீண்டும் மீண்டும் ஆன் மற்றும் ஆஃப் செய்யாமல் டைமரை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது மின்சாரம் சேமிக்கப்படும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan