கருடன் இயக்குநருடன் இணையும் லெஜண்ட் சரவணன்.
24 ஆனி 2024 திங்கள் 13:32 | பார்வைகள் : 10620
'கருடன்’ புகழ் இயக்குநர் துரைசெந்தில்குமாருடன் லெஜெண்ட் சரவணன் இணையும் புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.’எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’ போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவரது இயக்கத்தில், சமீபத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருந்த ‘கருடன்’ திரைப்படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே துரை செந்தில்குமாருடன் நடிகர் லெஜெண்ட் சரவணன் இணைவார் என சொல்லப்பட்டது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், லெஜெண்ட் சரவணன் - துரை செந்தில்குமாரின் புதிய படம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக இயக்குநர் செந்தில்குமார் கூறியிருக்கிறார்.
படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியாகியுள்ள லெஜெண்ட் சரவணின் புகைப்படங்கள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. வழக்கமான லுக்கில் இல்லாமல் தாடி, மீசையுடன் ஆக்ஷன் ஹீரோவாக சீரியஸான லுக்கில் இருக்கிறார் லெஜெண்ட்.
‘கருடன்’ படத்தில் எப்படி சூரியை துரைசெந்தில்குமார் வித்தியாசமாக காட்டினாரோ அதுபோலவே இந்தப் படத்தில் லெஜெண்ட்டையும் வித்தியாசமாக காட்டுவார் எனப் பலரும் கூறி வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan