Paristamil Navigation Paristamil advert login

குட் பேட் அக்லி’ படத்தில் பிரபல காமெடி நடிகர்?

குட் பேட் அக்லி’ படத்தில் பிரபல காமெடி நடிகர்?

24 ஆனி 2024 திங்கள் 11:36 | பார்வைகள் : 6092


அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ படத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அவர் முதல் முறையாக அஜித்துடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்பதும் அஜர்பைஜானில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் அஜித் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படப்பிடிப்பில் அஜித்தின் அறிமுக பாடல் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹைதராபாத்தில் மீண்டும் ’குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தற்போது காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில் சந்தானம், சூரி, சதீஷ் உட்பட சில காமெடி நடிகர்கள் தற்போது ஹீரோவாகிவிட்டதால் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி மட்டுமே காமெடி நடிகர்களாக நடித்து வருகின்றனர் என்பதும், அந்த வகையில் பல திரைப்படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி தற்போது ’குட் பேட் அக்லி’ படத்தின் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்