ரஷ்யாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் யூதவழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் - பலர் பலி

24 ஆனி 2024 திங்கள் 09:35 | பார்வைகள் : 7462
ரஷ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயங்கள் யூதவழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவ்ல்கள் வெளியாகியுள்ளது.
டெர்பென்ட் மற்றும் மகச்சலா நகரங்களில் பெந்தகோஸ்மத பிரிவினரின் மதவழிபாட்டு நிகழ்வின்போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஏழு பொலிஸார் மதகுரு பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில் டாகெஸ்தான் பல தடவை இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதலில் இரண்டு கிறிஸ்தவ தேவலாயங்களும் யூதவழிபாட்டுதலமும் இலக்குவைக்கப்பட்டதாகவும் கிறிஸ்தவமதகுரு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கறுப்புநிறத்தில் உடையணிந்தவர்கள் பொலிஸாரின் வாகத்தொடரணி மீது தாக்குதலை மேற்கொள்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
டேர்பென்ட் என்ற பகுதியில் பலவருடங்களாக யூதர்கள் வாழ்ந்து வரும் பகுதியில் உள்ள யூதவழிபாட்டுதலம் மீதும் கிறிஸ்தவ தேவாலயம் மீதும் தாக்குதல் நாடாத்தியதுடன் தாக்குதல்தாரிகள் அவற்றிற்கு தீவைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025