இளைஞர்களிடையே நவீன போதைப்பொருளாக மாறியுள்ள nitrous oxide.. 30 தொன் மீட்பு..!

23 ஆனி 2024 ஞாயிறு 16:03 | பார்வைகள் : 16417
இளைஞர்களிடன் புதிய போதைப்பொருளாக nitrous oxide உருவெடுத்துள்ளது. 'சிரிப்பு வாயு' என அழைக்கப்படும் இந்த வாயு, சிறிய குடுவைகளில் அடைக்கப்பட்டு ரகசியமாக விற்பனை செய்யப்படுகொறது. உடம்புக்கு திடீர் உற்சாகத்தையும், போதையையும் வழங்கும் இந்த வாயு, இளைஞர்களில் மோகப்பொருளாக கடந்த சில ஆண்டுகளில் மாறியுள்ளது.
இல் து பிரான்சுக்குள் இதனை விற்பனைசெய்துவரும் அமைப்பு ஒன்றை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், இந்த வாரத்தில் ஐவர் கொண்ட குழு ஒன்றை அவர்கள் கைது செய்தனர்.
போலந்தில் இருந்து பிரான்சுக்குள் கொண்டுவரப்பட்ட 30 தொன் எடையுள்ள இந்த வாயு குடுவைகள், மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தோடு €120,000 யூரோக்கள் ரொக்கப்பணத்தையும் கைப்பற்றியுளனர்.
ஒருசில மகிழுந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025