இலங்கையில் நாளை பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் வெளியான தகவல்
23 ஆனி 2024 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 12553
அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேதன அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு குறித்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan