யாழில் தேடப்படும் நபர் - பொது மக்களிடம் உதவிக் கோரல்

23 ஆனி 2024 ஞாயிறு 10:38 | பார்வைகள் : 4967
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று நோயாளி ஒருவருடன் சகஜமாக பேசி, அவருடைய மோதிரம், பணம், கைப்பை போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் தொடர்பில் தகவல் கோரப்பட்டுள்ளது.
குறித்த நபர் சிசிடிவி கமராவின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேகநபர் தொடர்பாக விபரம் தெரிந்தால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கோ வைத்தியசாலை நிர்வாகத்துக்கோ தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.
இந்த நோயாளி கடந்த 19ஆம் திகதி சத்திர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் தங்க ஆபரணங்களையோ பெறுமதியான பொருட்களையோ கொண்டு வரவேண்டாம் எனவும் தெரியாத நபர்களுடன் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. R
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025