'இந்தியன் 2' படத்தின் சூப்பர் அப்டேட்..
23 ஆனி 2024 ஞாயிறு 10:27 | பார்வைகள் : 8844
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’படம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை லைகா நிறுவனம் சற்று முன் அறிவித்துள்ளது. இதனை அடுத்து கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியன் 2’படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த சில வாரங்களுக்கு முன் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடந்தது என்பதை பார்த்தோம். இதனை அடுத்து இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் உலகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ’இந்தியன் 2’ என்றும், தெலுங்கில் ‘தி பாரதியுடு 2’ என்றும், இந்தியில் ’ஹிந்துஸ்தானி 2’ என்றும் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மூன்று மொழி ட்ரைலர் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் ஆவலுடன் இந்த டிரைலருக்கு காத்திருக்கின்றனர்.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan