எனக்கு உடல் உறுப்பு தானம் கிடைக்குமா? காத்திருக்கும் மூன்று வயது Côme.
23 ஆனி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 9283
நேற்றைய தினம் 22/06 உலக உடல் உறுப்பு தான தினம். "தானங்களில் உயர்ந்த தானம் ரத்த தானம், உடல் உறுப்பு தானம்" என்பார்கள். மிகவும் உணர்வு பூர்வமான ஒரு நிகழ்வு உடல் உறுப்பு தானம். ஒருவரின் இறப்பின் போது இயங்கும் உறுப்பை, இயங்காது இறக்கப்போகும் ஒருவருக்கு வழங்கி வாழ வைப்பது உடல் உறுப்பு தானம்.
குறித்த Côme என்னும் மூன்று வயதாகப் போகும் சிறுவன் மிகவும் துடிப்பான சிறுவன். அவனின் தந்தை ஒரு ரக்பி விளையாட்டு வீரர். தந்தை Henry Chavancyயுடன் சிறுவன் ஒடிவிளையாடுகிறான், ஆனால் பலவேளைகளில் கடும் நோய்யால் மதிக்கப்படுகிறான், நாள் ஒன்றுக்கு 20 வகையான மருந்துகளை எடுத்துக் கொள்கிறார் காரணம் அவனுக்கு கல்லீரல் சரிவர இயங்குவதில்லை. கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை அவருக்கு செய்ய வேண்டும் ஆனால் 14 மாதங்கள் காத்திருக்கிறார்கள் நன்கொடைக்காக இதுவரை கல்லீரல் தானம் அவனுக்கு கிடைக்கவில்லை.
மாதத்தில் பல தடவைகள் தாயாரோடு மருத்துவமனை சென்று வருகிறார் தாயார் ஏக்கத்துடன் ஒவ்வொரு முறையும் "உடல் உறுப்பு தானம் கிடைத்ததா" என்று கேட்கிறாள் "இல்லை" என்னும் பதிலோடு திரும்புகிறாள்.
காலம் செல்லச் செல்ல உடல் உறுப்பு தானம் கிடைக்காத பல குழந்தைகள் மேலும் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி சாவை தழுவும் நிலை ஏற்படுகிறது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரான்சில் இன்றைய நிலையில் 272 குழந்தைகள் நன்கொடையாளருக்காக காத்திருக்கின்றனர். என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சில் பத்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் உடல் உறுப்பு தானம் செய்வதில் மறுப்பு தெரிவிக்கிறார். தங்களின் உறவுகளில் மறைவின் போது அவரின் உடல் உறுப்பு தானத்திற்காக, மறைந்தவரின் உடலை கிழிப்பதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர் என கவலை தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan