இலங்கையில் விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் பறக்கவிட தடை
28 ஆவணி 2023 திங்கள் 12:17 | பார்வைகள் : 12975
இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில், விமானங்களுக்கு ஆபத்தாக முடியலாம் என்பதால் மக்கள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பட்டங்களை பறக்கவிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், உள்ளூர் மக்களுக்கு அறிவிக்க நடமாடும் வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் விமானங்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துச் சட்டத்தின்படி, விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்களுக்குள் உள்ள பகுதியில் 300 அடி அல்லது அதற்கு மேல் காற்றில் பட்டங்களை பறக்கவிடுவதும், ட்ரோன்களை பறக்கவிடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan