’மக்ரோனிசம் நிறைவடைந்துவிட்டது!’ - முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து கருத்து..!
22 ஆனி 2024 சனி 16:30 | பார்வைகள் : 12255
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் ஆட்சிக்காலத்தை குறிக்கும் விதமாக ‘மக்ரோனிசம் முடிந்துவிட்டது!’ என முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து தெரிவித்துள்ளார்.
”ஒரு கட்டத்தில் அவரால் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்த விஷயம் முடிந்துவிட்டது. பிரான்சில் தீவிர வலதுசாரிகள் ஒருபோதும் இவ்வளவு வலுவாக இருந்ததில்லை. இது மக்ரோனிசம் முடிவுக்கு வந்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்!’ என பிரான்சுவா ஒலோந்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், ‘நான் பிரான்சில் இடதுசாரி-வலதுசாரி எனும் சிந்தனையை மழுங்கடிப்பேன்’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார். அப்போது ’பிரான்சுவா ஒலோந்துவின் நீண்ட ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் தருணம்!’ எனவும் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடியாக ஒலோந்து இந்த கருத்தை தெரிவித்ததாக பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.





திருமண பொருத்தம்
இன்றைய ராசி பலன்

















Bons Plans
Annuaire
Scan