இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் அடையாள அட்டைகளை பெற்ற வாய்ப்பு

22 ஆனி 2024 சனி 11:48 | பார்வைகள் : 6654
40 வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது.
முன்னதாக இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தக் கால அவகாசம் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.