யாழில் எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் மீட்பு

22 ஆனி 2024 சனி 11:02 | பார்வைகள் : 9697
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருதங்கேணியைச் சேர்ந்த பவானி(43) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். இந்நிலையில் இரவு பத்து மணியளவில் எரிகாயங்களுடன் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த வேளை பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3