டி20 உலகக்கிண்ண போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்! சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்

21 ஆனி 2024 வெள்ளி 08:23 | பார்வைகள் : 3744
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
சூப்பர் 8 சுற்றின் இன்றையப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.
அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஷாண்டோ 36 பந்துகளில் 41 ஓட்டங்களும், ஹிரிடோய் 28 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி மிரட்டினார். இதன்மூலம் ஆடவர் டி20 உலகக்கிண்ண தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 7வது வீரர் மற்றும் இரண்டாவது அவுஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை அவர் படைத்தார்.
மேலும் வங்கதேச அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்த 4வது அவுஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஆவார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3