Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் மர்ம முறையில் பலி !

அமெரிக்காவில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் மர்ம முறையில் பலி !

28 ஆவணி 2023 திங்கள் 07:34 | பார்வைகள் : 2937


அமெரிக்கா - ஒகையோவில்  வீடு ஒன்றில் 3  குழந்தைகள் உட்பட 5 குடும்ப உறுப்பினர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

யூனியன்டவுன் பொலிஸார் வெளியிட்ட ஒரு அறிக்கையில்,

46 வயதான ஜேசன், 42 வயதான மெலிசா மற்றும் இவர்களது குழந்தைகள் 15 வயதான ரெனி,12 வயதான ஆம்பர் மற்றும் 9 வயது இவான் 15 மைல் தொலைவில் உள்ள லேக் டவுன்ஷிப்பில் உள்ள அவர்களது வீட்டில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்டார்க் கவுண்டி கரோனர் அலுவலகத்தின் தலைமை புலனாய்வாளர் ஹாரி கேம்ப்பெல் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தினார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தற்போது வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திடீர் மரணம் அக்கம் பக்கத்தினரையும், பாடசாலை நிர்வாகிகளையும், குடும்பத்தினரை அறிந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினால் குடும்பம் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்