Paristamil Navigation Paristamil advert login

பண்டஸ்லிகா தொடர் - இரட்டை கோல் அடித்த ஹரி கேன்!

பண்டஸ்லிகா தொடர் - இரட்டை கோல் அடித்த ஹரி கேன்!

28 ஆவணி 2023 திங்கள் 07:32 | பார்வைகள் : 6745


பண்டஸ்லிகா தொடரில் பாயர்ன் முனிச் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அக்ஸ்பர்க் அணியை வீழ்த்தியது.

Allianz Arena மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் அக்ஸ்பர்க் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.

இதில் 32வது நிமிடத்தில் அக்ஸ்பர்க் அணி வீரர் கோலை தடுக்க முயன்றபோது அது சுயகோல் (OG) ஆக மாறியது.

அதனைத் தொடர்ந்து 40வது நிமிடத்தில் பாயர்ன் முனிச் அணிக்கு handball மூலம் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹரி கேன் அபாரமாக கோல் அடித்தார்.

இதன்மூலம் ஆட்டம் 2-0 என்று இருந்தது.

பின்னர் நடந்த இரண்டாம் பாதியின் 69 வது நிமிடத்தில் சீறி வந்த பந்தை, ஹரி கேன் மின்னல் வேகத்தில் கோலாக மாற்றினார்.

பாயர்ன் முனிச் 3-0 என முன்னிலை வகித்த நிலையில், அக்ஸ்பர்க் அணியின் முயற்சிக்கு 86வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.

அந்த அணியின் டியான் ட்ரெனா பெலிஜோ, எதிரணி கோல் கீப்பரை ஏமாற்றி அசத்தலாக கோல் அடித்தார்.

ஆனால், கூடுதல் நேரத்தில் தொடர்ந்து கோல் அடிக்க முடியாததால் அக்ஸ்பர்க் தோல்வியை தழுவியது.

பாயர்ன் முனிச் அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்