ஒரு மகளை பெற ஆசைப்பட்டு 9 மகன்களுக்கு தாயான அமெரிக்க பெண்...!
20 ஆனி 2024 வியாழன் 09:33 | பார்வைகள் : 4047
அமெரிக்க நாட்டை சேர்ந்த 31 வயதான பெண்ணொருவர், ஒரு மகளை பெறுவதற்கான ஆசையில் 9 மகன்களுக்கு தாயாகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது கதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அந்த காணொளி வைரலாகி வருகிறது.
அவர் குறித்த காணொயில் வெளியிட்ட பதிவில்,
யலன்சியா ரொசாரியோ என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணுக்கு ஒரு மகள் வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து ஆண் குழந்தைகளே பிறந்தன.
ஆனால் மகள் வேண்டும் என்ற ஆசையில் அடுத்தடுத்து 9 முறை கர்ப்பமான அவருக்கு ஒவ்வொரு முறையும் ஆண் குழந்தைகளே பிறந்தது.
இந்நிலையில் 10-வது முறையாக அவர் கர்ப்பமானார்.
பிரசவத்தின் போது அவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
அதில் அவரது ஆசைப்படியே ரொசாரியோவுக்கு அழகான, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.
அதன்பிறகு அவரது ஆசை தீரவில்லை.
தற்போது தனது மகளுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்ற ஆசையில் 11-வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.
அதோடு அவர் தனது மகன்கள் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் என்னவாக வர வேண்டும் என்ற கனவுகளை அவர்களே தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan