ரஜினின் அடுத்த படத்தின் இயக்குனர் யார்?
20 ஆனி 2024 வியாழன் 09:10 | பார்வைகள் : 8464
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தை தொடர்ந்து ரஜினி எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் என்பது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அந்த இயக்குனர் யார் என்பதை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதன் பின்னர் பீஸ்ட் என்ற சுமாரான படத்தை கொடுத்த நெல்சன் திலீப்குமார் உடன் ரஜினிகாந்த் இணைந்தார். இந்த காம்போவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் படத்தின் ஷூட்டிங்கின்போது வெளிவர தொடங்கின.
ஜெயிலர் என்ற பெயரில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 650 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இயக்குனர் நெல்சனின் மார்க்கெட் விறுவிறுவென உயர்ந்துள்ளது.
ஜெயிலர் படத்தின் மிகப்பெரும் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ள ரஜினிகாந்த் நெல்சனிடம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதுமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தின் கதையை தற்போது நெல்சன் வடிவமைத்து வருகிறார்.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி என்ற படத்தில் நடித்து உள்ளார். மற்ற இயக்குனர்களை விடவும் மேக்கிங்கில் லோகேஷ் கனகராஜ் தனித்து நிற்பதால் கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் படத்தின் மீதான ஆவலை தூண்டி உள்ளது. இந்நிலையில் கூலி படத்திற்கு பின்னர் எந்த இயக்குனரை ரஜினிகாந்த் தேர்வு செய்வார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதே நேரம் ஜெயிலர் 2 படத்தில் அடுத்ததாக நடிப்பார் என்றும் கோலிவுட்டில் பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்துக்கு பேட்ட என்ற மிகவும் ஸ்டைலான படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உடன் அடுத்த படத்தில் ரஜினி இணைவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது கூலி படத்தின் ஷூட்டிங் முடித்தவுடன் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று தற்போது கோலிவுட்டில் பேசப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan