நடிகர் வடிவேலுவின் தம்பி காலமானார்

28 ஆவணி 2023 திங்கள் 06:03 | பார்வைகள் : 11789
நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீசன். இவருக்கு வயது 55. கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த இவர், மதுரை ஐரவாதநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை உயிரிழந்தார். மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த ஜெகதீசன் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்தும் உள்ளார். பின் தொடர்ந்து எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். ஜெகதீசனின் இறுதிச்சடங்கு நாளை காலை, அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வைகைப்புயல் வடிவேலுவுடைய அப்பா நடராசன், அம்மா சரோஜினி அம்மாள். வடிவேலுவுடன் மூன்று தம்பிகளும், இரண்டு தங்கைகளும் உடன் பிறந்தவர்கள்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025