இல் து பிரான்சைச் சேர்ந்த பயணிகளுக்கு 12.5 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு!
19 ஆனி 2024 புதன் 19:06 | பார்வைகள் : 13590
இல் து பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு 12.5 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டில் போக்குவரத்து தாமதத்தினை சந்தித்த பயணிகளுக்கான இழப்பீடுகளே வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக RER சேவைகளான B, C மற்றும் D ஆகியவற்றை பயன்படுத்துவோருக்கும் , Transilien சேவைகளில் P வழிச் சேவையினை பயன்படுத்துவோருக்கும் என மொத்தமாக 246,000 பேருக்கும் அதிகமானோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளன.
337,000 கோரிக்கைகள் பதிவாகியிருந்த நிலையில், அவற்றில் 246,000 பேர் மட்டுமே இழப்பீடு பெற ஏற்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஒன்றரை மாத பயணச்சிட்டையின் விலையாக 126.12 யூரோக்கள் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan