மத்திய பட்ஜெட்: பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை
19 ஆனி 2024 புதன் 13:59 | பார்வைகள் : 9000
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் குறித்து நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான பணிகளில் நிதியமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
இந்நிலையில், நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட் முந்தைய ஆலோசனை கூட்டத்தை நிர்மலா சீதாராமன் நடத்தினார். இந்த கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர்கள், ரெவின்யூ மற்றும் கார்ப்பரேட் துறை செயலாளர், தலைமை பொருளாதார ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Image 1283189


























Bons Plans
Annuaire
Scan