Paristamil Navigation Paristamil advert login

Courbevoie : 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவர்களுக்கு சிறை!

Courbevoie : 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவர்களுக்கு சிறை!

19 ஆனி 2024 புதன் 08:33 | பார்வைகள் : 8056


12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இரு சிறுவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன.

Courbevoie (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் கடந்தவார இறுதியில் இடம்பெற்றுள்ளது. 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்கள், குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். அத்தோடு யூத மதத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியை, கொலை செய்துவிடுவோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இரு சிறுவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கவும் பட்டுள்ளது. 

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவர்கள் சிறுவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்