Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 4 பேர் பலி

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 4 பேர் பலி

19 ஆனி 2024 புதன் 07:41 | பார்வைகள் : 8300


ஈரான் நாட்டின் வடகிழக்கு நகரமான காஷ்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதோடு 4 பேர் உயிரிழந்ததுடன், 120 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டு நேரப்படி மதியம் 1.24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறிய நிலையில் சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2003ஆம் ஆண்டு ஈரானின் தென்கிழக்கு நகரமான பாமில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 31,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்