முடிந்தவரை இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான Nouveau Front populaireக்கு வாக்களியுங்கள். CGT
 
                    18 ஆனி 2024 செவ்வாய் 18:14 | பார்வைகள் : 19792
கடந்த சனி, ஞாயிறு தினங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை பிரான்ஸ் முழுவதும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, தீவிர வலதுசாரி கட்சிக்கு எதிராக நடத்திய பின்னர்; இன்று இரண்டாவது பெரும் தொழிற்சங்கமான CGT மேற்குறிப்பிட்ட அழைப்பை விடுத்துள்ளது.
இன்று ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த CGT தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் Mme Sophie Binet "முடிந்த வரை தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், வேலைவாய்ப்பற்றவர்கள், இளையோர்கள் என அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள். வலதுசாரிகள் தொழிலாளர்களுக்கு ஆபத்தானவர்கள் எனவே 'Nouveau Front populaireகே வாக்களியுங்கள்" எனவும் இதனை நாங்கள் ஆணையாகச் சொல்லவில்லை வேண்டுகோளாக விடுக்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இடதுசாரிகளின் கூட்டு அமைப்பான Nouveau Front populaireன் திட்டங்கள் தங்களின் அபிலாஷைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதாகவும் CGT தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் Mme Sophie Binet தெரிவித்துள்ளார்.
ஒரு தேர்தலுக்கு முன்னர் குறித்த ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் படி CGT தொழிற்சங்கம் வெளிப்படையாக அழைப்பு விடுப்பது வரலாற்றில் இது முதல் தடவை அன்று சொல்லப்படுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan