காவல்துறையினரின் எட்டு கைத்துப்பாக்கிகள் திருட்டு..!
18 ஆனி 2024 செவ்வாய் 16:19 | பார்வைகள் : 10708
காவல்துறையினரின் கைத்துப்பாக்கிகள் எட்டு திருடப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது அவை திருடப்பட்டுள்ளன.
பிரான்சின் தெற்கு பகுதியான Béziers (Hérault) நகரின் அருகே உள்ள வெட்டைவெளி பகுதியில் காவல்துறையினருக்காக துப்பாக்கி சுடும் பயிற்சி இடம்பெற்றது. அங்கு ஜூன் 11 - 12 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் பிஸ்ட்டல் வகை துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளில் குறித்த துப்பாக்கி சுடும் பயிற்சி இடம் பாதுகாப்பற்றது எனவும், அங்கு மின்சார வசதி கூட இல்லை எனவும், துப்பாக்கிகளை பாதுகாப்பாக வைப்பதற்குரிய பெட்டகங்கள் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, துப்பாக்கிகள் மட்டுமே திருடப்பட்டதாகவும், சன்னங்கள் எதுவும் திருடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan