Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வயோதிபப் பெண்ணை கட்டி வைத்துவிட்டு வீட்டில் கொள்ளை

இலங்கையில் வயோதிபப் பெண்ணை கட்டி வைத்துவிட்டு வீட்டில் கொள்ளை

18 ஆனி 2024 செவ்வாய் 15:13 | பார்வைகள் : 6472


களுத்துறை, வாதுவை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் அங்கிருந்த வயோதிபப் பெண்ணை கயிற்றினால் கட்டி வைத்துவிட்டு வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை, வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

சம்பவத்தின்போது இந்த வயோதிபப் பெண் வீட்டில் தனியாக இருந்துள்ள நிலையில் கத்தியுடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வயோதிபப் பெண்ணை கயிற்றினால் கட்டி வைத்துவிட்டு வீட்டிலிருந்த தொலைகாட்சிப் பெட்டி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இந்த வயோதிபப் பெண் இது தொடர்பில் வாதுவை பொலிஸ் நிலையத்தில் நேற்று (17) முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்