Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் கோர விபத்து - 10 பேர் பலி

ஈரானில் கோர விபத்து - 10 பேர் பலி

27 ஆவணி 2023 ஞாயிறு 11:18 | பார்வைகள் : 9323


ஈரானில் மலையேறிகள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் வரை பலியாகியுள்ளனர்.

ஈரானில் மலையேறிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் வர்சகன்(Varzaghan) நகருக்கு அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது என மாகாண அவசர சேவைகளின் செய்தி தொடர்பாளர் வஹித் ஷாதினியா தெரிவித்துள்ளார்.

மினி பேருந்து மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா கிராமங்களை நோக்கி சென்ற போது தீர்மானிக்கப்படாத காரணத்தால் கவிழ்ந்து பள்ளத்தாக்கில் விழுந்து உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மினி பேருந்தின் சாரதி உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர் என செய்தி தொடர்பாளர் வஹித் ஷாதினியா தெரிவித்துள்ளார்.

மேலும் பயணிகள் சரியாக சீட் பெல்ட் அணிந்து இருந்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் சாலைகள் நல்ல முறையில் இருப்பினும், மோசமான சாரதி திறன் மற்றும் வாகன பராமரிப்பு மீதான சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை ஆகிய காரணங்களால் உலகின் அதிகமான சாலை உயிரிழப்புகளில் ஈரானும் உள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்