சுதா கொங்கராவின் அடுத்த பட ஹீரோ இவரா?
17 ஆனி 2024 திங்கள் 15:47 | பார்வைகள் : 7127
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘புறநானூறு’ என்ற திரைப்படம் உருவாகியிருந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிய நிலையில் திடீரென இந்த படம் ட்ராப் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகு சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கிய நிலையில் சுதா கொங்கராவின், ’சூரரை போற்று’ ஹிந்தி படத்தை முடித்தவுடன் அடுத்த படத்திற்கான பணியை தொடங்கி விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் அல்லது சாந்தி டாக்கீஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் வரும் நவம்பர் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரை போற்று’ இந்தி ரீமேக் படமான ‘சர்ஃபிரா’ வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan