ஹஜ் கடமைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்ற 14 ஜோர்தானியர்கள் பேர் பலி

17 ஆனி 2024 திங்கள் 12:24 | பார்வைகள் : 6654
ஹஜ் கடமைக்காக சவுதி அரேபியாவிற்கு சென்ற 14 ஜோர்தானியர்கள் கடும் வெப்பத்தினால் உயிரிழந்துள்ளனர்.
ஹஜ் கடமையில் ஈடுபட்டிருந்தவேளை 14 பேர் உயிரிழந்துள்ளனர் 17பேர் காணாமல்போயுள்ளனர் என ஜோர்தானின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே தனது நாட்டின் பிரஜைகள் உயிரிழந்தனர் என ஜோர்தான் தெரிவித்துள்ளது.
இதேவேளை இதுவரை மெக்கா மெதினாவில் ஐந்து ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கடும் வெப்பத்தினால் 2760 ஹஜ் யாத்திரீகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025