புளோரிடாவில் நிறவெறி தாக்குதல் - மூவர் பலி
27 ஆவணி 2023 ஞாயிறு 09:44 | பார்வைகள் : 11345
புளோரிடா ஜக்சன்வில் பகுதியில் நிறவெறி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் மூன்று கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளையினத்தை சேர்ந்த நபர் ஒருவர் வர்த்தக நிலையமொன்றிக்குள் புகுந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நிறவெறி காரணமாக இழைக்கப்பட்ட குற்றம் என நகரமேயர் தெரிவித்துள்ளார்.
தாக்தலை மேற்கொண்டவர் தனியாக செயற்பட்டுள்ளார் - அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
பெற்றோருடன் வசித்த அவர் தனது நோக்கத்திற்கான காரணங்களை வெளியிட்டுள்ளார்


























Bons Plans
Annuaire
Scan