Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோருக்கு முக்கிய தகவல்

சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோருக்கு முக்கிய தகவல்

17 ஆனி 2024 திங்கள் 08:52 | பார்வைகள் : 9313


சுவிட்சர்லாந்தின் நீண்ட காலமாக வசிப்பவர்களுக்குக் கூட, சுவிஸ் குடியுரிமை பெறுவது குறித்த நடைமுறைகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 

ஆகவே, சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு மிகவும் பயனுள்ளது என கருதப்படும் சில தகவல்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் குடியுரிமை பெற விரும்புவோருக்கு மிகவும் உதவக்கூடிய ஒரு அமைப்பு, State Secretariat for Migration (SEM) என்னும் புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகமாகும்.

அது மட்டுமின்றி, சுவிட்சர்லாந்தில் பணி அனுமதி, விசா பெறுதல் மற்றும் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய என்னென்ன தேவை என்பது குறித்த விடயங்களை அறிந்துகொள்வதற்கும், பல்வேறு நாட்டவர்களுக்கும், இந்த அரசு அமைப்பு உதவியாக இருக்கும்.  

Ch.ch என்னும் இந்த இணையதளம், பெடரல் மற்றும் மாகாண அதிகாரிகளால் நடத்தப்படுகிறது.

ஆகவே, அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் நம்பத்தக்கவையாக இருக்கும்.

உங்கள் நாட்டிலுள்ள சுவிஸ் தூதரகம், உங்கள் நாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகளைக் குறித்து நன்கறிந்ததாக இருக்கும் என்பதால், அதனால் உங்களுக்கு ஏற்ற, பயனுள்ள தகவல்களை சிறப்பாக உங்களுக்கு அளிக்க முடியும்.  

இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விடயம் எனவென்றால், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான பெடரல் நடைமுறைகள் ஒரேமாதிரியானவைதான் என்றாலும், மாகாணத்துக்கு மாகாணம் சில விதிகள் மாறுபடும்.


ஆகவே, மாகாண இணையதளங்களையும் பார்வையிடுவது சுவிஸ் குடியுரிமை பெறுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

வர்த்தக‌ விளம்பரங்கள்