Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் நீர் குழாயில் வெடிப்பு ; பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

கொழும்பில் நீர் குழாயில் வெடிப்பு ; பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்

17 ஆனி 2024 திங்கள் 05:06 | பார்வைகள் : 5184


கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மஹரகம பகுதிக்கு நீர் கொண்டு செல்லும்  குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பல பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி குழாய் மீது மோதியதில் குழாயில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஹைலெவல் வீதியில் கொடகம சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இதனால், கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டி, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொடை ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்