பரிஸ் : கூரை வழியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்.. இருவர் காயம்..!!
16 ஆனி 2024 ஞாயிறு 16:54 | பார்வைகள் : 21994
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் கூரை வழியாக இறங்கிய கொள்ளையர்கள், வீட்டில் வசித்த இரு முதியவர்களை தாக்கியுள்ளனர்.
இன்று ஜூன் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து இளம் கொள்ளையர்கள், வீட்டுக்குள் கூரை வழியாக இறங்கியுள்ளனர். பின்னர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இரு முதியவர்களை அச்சுறுத்தி அவர்களின் பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க கோரியுள்ளனர்.
அவர்களிடம் இருந்த திருப்பிலி (ஸ்குரூ ட்ரைவர்) மூலம் அவர்களை தாக்கியதாகவும், இதில் இருவரும் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து 500 யூரோக்கள் பணம், நகைகள், கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த பைகள் போன்றவற்றை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி கணக்கிடப்படவில்லை.
பின்னர், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த 16 ஆம் வட்டார காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, கொள்ளையர்கள் ஐவரையும் கைது செய்தனர். கொள்ளையிடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan