Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இசை நிகழ்ச்சியில் இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் இசை நிகழ்ச்சியில் இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

16 ஆனி 2024 ஞாயிறு 15:27 | பார்வைகள் : 7010


இசை நிகழ்ச்சி ஒன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடங்கொட - ஜனஉதான கிராமத்தில் வசித்து வந்த 20 வயதுடைய மெனுர நிம்தர வணிகசேகர என்ற இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

​கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், உள்ளூர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில், பின்னர் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண், களுத்துறை, கமகொட பிரதேசத்தில் உள்ள குமுது மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்திருந்தார்.

இதன்போது அவர் பணிபுரியும் ஆடைத் தொழிற்சாலையின்  இளைஞர் ஒருவருடன் நடனமாடிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது கோபமடைந்த சந்தேகநபர், நடனமாடிக்கொண்டிருந்த இளைஞரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்ததாகக் கூறப்படுகிறது.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்