பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ள Ouigo சேவை..!
16 ஆனி 2024 ஞாயிறு 10:08 | பார்வைகள் : 3514
குறைந்த விலை கட்டண தொடருந்தான Ouigo சேவையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த கோடை காலத்தில் அதிக பயணிகளை கவரும் நோக்கி புதிய தரிப்பிடங்கள் மற்றும் அதிக தொடருந்துகளை இயக்க SNCF திட்டமிடப்பட்டுள்ளன.
குறிப்பாக அட்லாண்டிக் நோக்கிச் செல்லும் Ouigo சேவை இதுவரை 60 நிலையங்களில் நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் 75 நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளன. அதேவேளை குறித்த Ouigo சேவைகளில் 20% சதவீதமானவை அதிவேகமாக பயணிக்கும் நிலையில், விரைவில் அவற்றை 30% சதவீதமாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டில் Ouigo சேவை பத்து மில்லியன் பயணிகளை சந்திக்கும் எனவும், தற்போது 75% சதவீதமாக இருக்கும் தொடருந்து ஆக்கிரமிப்பை, 85% சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கட்டண அதிகரிப்பு குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.