Paristamil Navigation Paristamil advert login

நயன்தாராவை மிஞ்சிய ராஷ்மிகா மந்தனா ..

நயன்தாராவை மிஞ்சிய ராஷ்மிகா மந்தனா ..

15 ஆனி 2024 சனி 15:37 | பார்வைகள் : 7257


தென்னிந்திய திரை உலகில் நயன்தாரா தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஒரே ஒரு பாலிவுட் படத்தின் வெற்றி காரணமாக நடிகை ராஷ்மிகா மந்தனா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, மாஸ் நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்த ’புஷ்பா 2’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா மந்தனா நடித்த ’அனிமல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வசூலிலும் இந்த படம் சாதனை செய்த நிலையில் இந்த படத்தின் வெற்றி காரணமாக ராஷ்மிகா மந்தனாவுக்கு மார்க்கெட் உயர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சிக்கந்தர்’ படத்தின் நாயகியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்க அவருக்கு மிகப்பெரிய சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் அதாவது 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா ஒரு படத்திற்கு 10 முதல் 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை விட அதிகமாக ராஷ்மிகா மந்தனாவுக்கு சம்பளம் கிடைத்துள்ளது என்ற தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ’அனிமல்’ என்ற ஒரே ஒரு வெற்றிப்படம் காரணமாக ராஷ்மிகா மந்தனா மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது மட்டுமின்றி நயன்தாராவை தென்னிந்திய அளவில் பின்னுக்கு தள்ளியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்