யாஷ் படத்தில் களமிறங்கியுள்ள நயன்தாரா..
15 ஆனி 2024 சனி 11:58 | பார்வைகள் : 6070
KGF பான் இந்தியா படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ். பிரம்மாண்ட படைப்பாக, மிரள வைக்கும் ஆக்க்ஷன், உச்சகட்ட மாஸ் காட்சிகளை கொண்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த படம் KGF, இந்த படத்தின் முதல் இரண்டு பாகத்திலும் ஹீரோவாக நடித்து அசத்தியவர் நடிகர் யாஷ். KGF 2 ஆம் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், KGF 3ஆம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் யாஷின் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, தற்போது நடிகர் யாஷ் Toxic (டாக்சிக்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் யாஸீன் சகோதரி கதாபாத்திரத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார், யார் அந்த நடிகை தெரியுமா? தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயந்தாரா தான் அந்த காதிபத்திரத்தில் நடிக்கிறார்.
நயன்தாரா நடிக்கவுள்ள இந்த கதாபாத்திரத்தில் நடிகை கரீனா கபூர் நடிக்கவிருந்த நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், படிப்பிடிப்பு இந்தியாவில் தான் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் Toxic (டாக்சிக்) படத்தில் ஸ்டைலிஷ் டானாக நடிக்கவுள்ளார் யாஷ், இவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
KGF ரசிகர்கள் நடிகர் யாஷ் நடித்து வரும் டாக்சிக் படத்தின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பை வைத்துள்ளனர், மேலும் படத்தில் நயன்தாரா மற்றும் கியாரா அத்வானி நடிப்பது இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan