கனடாவில் Massage நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மோசமான செயல்!

15 ஆனி 2024 சனி 07:31 | பார்வைகள் : 5786
கனடாவில் மில்டன் பதிவு செய்யப்பட்ட massage நிபுணர் (massage therapist) ஒருவர் பெண் சேவை பெறுநரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஹால்டன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தொம்சன் வீதியில் அமைந்துள்ள மசக்குதல் நிலையம் ஒன்றில் வைத்து குறித்த நபர் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறித்த பெண் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதான ஸ்டினடர்பால் சிங் கில் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஹால்டன், பீல் மற்றும் யோக் பிராந்தியங்களிலும் இவர் தனது சேவையை வழங்கி வந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் மேலும் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறான நபர்களை தாமாக முன் வந்து முறைப்பாடு செய்ய வேண்டும் என சார் பொலிஸார் கோரியுள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025