இரண்டாவது திருமணம் குறித்து அறிவித்த சீரியல் நடிகை...
14 ஆனி 2024 வெள்ளி 15:29 | பார்வைகள் : 7002
‘நாதஸ்வரம்’ என்ற சீரியலில் மலர் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்திரிக்கா. மேலும் இவர் ’குலதெய்வம்’ ’என் இனிய தோழி’ ’கல்யாணமாம் கல்யாணம்’ ’கல்யாணப்பரிசு’ ’மகராசி’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சனேஷ் என்பவரை ஸ்திரிக்கா திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த நிலையில் ’மகராசி’ என்ற தொடரில் தன்னுடன் நடித்து வரும் ஆர்யன் என்பவரை ஸ்திரிக்கா சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த தகவலை அவர் அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் ஆர்யனும் எங்களது முந்தைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டோம். கடந்த கால வாழ்க்கை குறித்து எதையும் நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. யாரையும் குறை சொல்லவும் விரும்பவில்லை. எங்களது புனிதமான நட்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதை அடுத்து எங்கள் இருவருக்குமே நம்பிக்கை கொடுத்துள்ளது. உங்கள் ஆதரவுடன் விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். விரைவில் இது குறித்த முழு விவரங்களை உங்களுக்கு பகிர்வோம்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை ஸ்திரிக்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan