Paristamil Navigation Paristamil advert login

'கோட்' படத்தில் இணைந்த இளையராஜாவின் மகள்

 'கோட்' படத்தில் இணைந்த இளையராஜாவின் மகள்

14 ஆனி 2024 வெள்ளி 12:29 | பார்வைகள் : 3605


தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஒரு சில நிமிடங்கள் ஏஐ டெக்னாலஜி மூலம் வருவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்னொரு மறைந்த பிரபலமும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங், கிராபிக்ஸ், எடிட்டிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு பகலாக தொழில்நுட்ப பணியாளர்கள் விறுவிறுப்பாக பணிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் கேப்டன் விஜயகாந்த் நடிக்கிறார் என்றும் ஏஐ டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டுள்ள அவரது காட்சிகள் சூப்பராக வந்திருப்பதாகவும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர்கள் அந்த காட்சிகளை பார்த்து அனுமதி அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மறைந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணியின் குரல் இந்த படத்தில் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் பாடியதாக ஒரு பாடல் இந்த படத்தில் இடம்பெறுவதாகவும், பவதாரணிக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் அந்த பாடல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்