Paristamil Navigation Paristamil advert login

இலங்கை கிரிக்கட் அணி வீரர்களுக்கு கொவிட் தொற்று!

இலங்கை கிரிக்கட் அணி வீரர்களுக்கு கொவிட் தொற்று!

26 ஆவணி 2023 சனி 12:17 | பார்வைகள் : 10095


கடந்த வாரம் நிறைவுக்கு வந்த லங்கா பிரிமியர் லீக் (LPL) தொடரில் தம்புள்ள ஓரா அணிக்கு விளையாடிய இலங்கை அணியின் ‘பொடி சனா’ என பலராலும் வர்ணிக்கப்படும் குசல் ஜனித் பெரேரா மற்றும் வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெனாண்டோ கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க உள்ள நிலையில் ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் முடிவுற்ற லங்கா பிரிமியர் லீக் தொடரில் பிரகாசித்த குசல் ஜனித் பெரேரா இலங்கை ஆசிய கிண்ண தொடருக்கான குழாமில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்து இருந்த நிலையில் தற்போது அவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

எவ்வாறாயினும் இந்த இரண்டு வீரர்களும் ஆசிய கிண்ண கிரிக்கட் தொடருக்கு முன் அல்லது ஆரம்பமாவதற்கு இடையில் குணமடைந்து விடுவார்கள் என நம்பப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்