விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பரிசுத் தொகை அதிகரிப்பு
 
                    14 ஆனி 2024 வெள்ளி 08:24 | பார்வைகள் : 5408
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் பரிசுத் தொகை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் 50 மில்லியன் பவுண்டுகள் ( இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.1940 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும்.
ஒற்றையர் சாம்பியன்கள் தலா 2.7 மில்லியன் பவுண்ட் பெறுவார்கள் என்று ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் (AELTC) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு போட்டியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத் தொகை சுமார் 11.9 சதவீதம் (5.3 மில்லியன் பவுண்டுகள்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 5.3 மில்லியன் பவுண்டுகள் அதிகம்.
ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் சாம்பியன்கள் தலா 2.7 மில்லியனைப் பெறுவார்கள். முதல் சுற்றில் தோற்றவர்கள் 60,000 பவுண்டுகள் பெறுவார்கள்.
தோல்வியுற்ற இறுதிப் போட்டியாளர்களுக்கு தலா 1.4 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும்.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஜூலை 1 முதல் 14 வரை நடைபெறுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan