Paristamil Navigation Paristamil advert login

Val-d'Oise : துப்பாக்கியால் சுடப்பட்டு சாரதி கைது!

Val-d'Oise : துப்பாக்கியால் சுடப்பட்டு சாரதி கைது!

13 ஆனி 2024 வியாழன் 20:41 | பார்வைகள் : 11916


மகிழுந்து சாரதி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். Val-d'Oise மாவட்டத்தில் இடம்பெற்ற நீண்ட துரத்தலின் பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

A16 நெடுஞ்சாலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஜொந்தாமினர், சந்தேகத்துக்கு இடமான மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தனர். ஆனால் குறித்த மகிழுந்து நிற்காமல் தொடர்ந்து பயணித்துள்ளது.

அதையடுத்து ஜொந்தாமினர் குறித்த மகிழுந்தை துரத்திச் சென்றனர்.

பல கிலோமீற்றர்கள் தூரம் பயணித்த இந்த துரத்தல் இடம்பெற்ற நிலையில், இறுதியாக Amblainville சுங்கச்சாவடி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டார்.

நாற்பது வயதுடைய குறித்த சாரதி இலேசான காயங்களுக்கு உள்ளானார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.